RSS

தெய்வம் தொழாள்!


n Wednesday, February 8, 2012 at 6:56am ·
அன்று ஒருநாள் 1978ம் ஆண்டு September  10ம் திகதி தனியார்துறைக் கல்வி நிலையத்தில் வகுப்பு எடுப்பதற்காக எனது நண்பன் ரகுவையும் ஏற்றிக்கொண்டு HONDA 250 CC மோட்டார் சைக்கிளில் நெல்லியடிக்குச் சென்றுகொண்டிருந்தேன். அக்காலத்தில் எங்கள் பெயர்களையும் படங்களையும் பெரிய பெரிய POSTER களாக ஒட்டி அறிமுகம் செய்வதில் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ஒரு மதிப்பு. நெல்லியடியை அடைவதற்கு வல்லன் வெயியைத் தாண்டிச் செல்ல வேண்டும். இந்த இடத்தில் 160 இல் கூட ஓடி இருக்கிறேன். அச்சுவேலி முடிந்தவுடன் வல்லன்வெளி தொடங்குகிறது. வல்லன்வெளி தொடக்கத்திலும் முடிவிலும் ஒரு கள்ளுத் தவறணை உண்டு. நான் பொருளியல் ஆசிரியர்; ரகு இந்துநாகரிக ஆசிரியர். 

ரகு சொன்னான் "மச்சான் இதில எனக்குத் தெரிந்த ஒரு கள்ளு விற்கும் வீடு இருக்கிறது. அங்கு சென்று ஒரு அரை அடித்துவிட்டுச் சென்றால் வல்லன்வெளியில் முகத்தில் காற்றுப் பிடிக்க மோட்டார் சைக்கிள் ஓட்டத்திற்கு சொர்க்கமே தெரியும்" என்றான். அப்போது எனக்கு கவிஞர் கண்ணதாசனின் வரிகள் நினைவுக்கு வந்தன. "ஓர்கையில் மதுவும் மறுகையில் மங்கையும் இல்லாதான் இறந்தால் ஏன் வந்தாய் என்று இறைவன் எனைக் கேட்பான் என்பது. சொர்க்கத்தை ரசிக்க யாருக்குத்தான் விருப்பம் இருக்காது. வகுப்பு முடிந்து வரும்போது பார்ப்போம் என்று ரகுவிற்குச் சொல்லி கல்லி நிறுவனத்திற்குச் சென்விட்டோம். 

அங்கு லொயிக் வகுப்பு நடந்து கொண்டிருந்தது. மிகவும் இலகுவான பாடம். பார்த்தால் கடினமாகத் தொன்றும். சிந்தித்தால் விசராக இருக்கும். உதாரணமாக "நான் வாங்கிலில் இருக்கிறேன். வாங்கிலை நான் தொடுகிறேன். அவளும் வாங்கிலில் இருக்கிறாள்; எனவே நான் அவளைத் தொடுகிறேன. காகம் கறுப்பு. காகம் ஒரு பறவை. பறவைகள் எல்லாம் கறுப்பு அல்ல. இப்படித்தான் அந்தப் பாடத்தின் விளக்கங்கள். அந்த வகுப்பில்தான் ஆண்களைச் சன்நியாசியாக்கும் சரளா என்பவளும் படித்தாள். எனது பொருளியல் பாடம் அவள் எடுப்பதில்லை. அது எனக்குக் கொஞ்சம் கவலைதான். இருந்தாலும் அவளது தம்பி எனது வகுப்பில் படிக்கிறான். (A.E. மனோகரனின் பாட்டு எனக்கு அடிக்கடி நினைவு வரும்; வேல்விழாவில் கண்டு எந்தன் நெஞ்சம் இழந்தேன்; கூடவந்த தம்பிமீது அன்பைச் சொரிந்தேன்). பல்கழலைக் கழகத்தில் படிக்கும்போது சனி ஞாயிறு என்றால் எனக்கு ஓவ்வே இருப்பதில்லை. கந்தர்மடம் மானிப்பாய் சுன்னாகம் தெல்லிப்பளை பண்டத்தரிப்பு நெல்லியடி பருத்தித்துறை சாவகச்சேரி சுண்டிக்குளி என்ற இடங்களில் வகுப்புகள் இருக்கும். டாக்கரின் மகள்; வக்கீலின் மகள்; நீதிபதியின் மகள்; பெரிய பணக்காரவீட்டுப் பிள்ளைகள் என்றெல்லாம் எங்களிடம் படிப்பார்கள். சந்தைக்கு போனால் என்ன; சினிமாவிற்குப் போனால் என்ன; சுபாs கபேக்குப் போனால் என்ன எங்களைச் சுற்றி ஒரு மாணவர்கூட்டம் திரண்டுவிடும். மிகவும் மகிழ்ச்சியான காலங்கள். 

வகுப்பு முடிந்து திரும்பிவருகிறோம். ரகுவின் தொல்லை தாங்கமுடியவில்லை. வல்லன்வெளி கடந்து அந்தக் கள்ளுவிற்கும் வீட்டிற்குப் போனோம். யாழ்ப்பாணத்தில் சில வீடுகளின் வேலிகள் பிரத்தியேகமான உயரத்தில் இருக்கும். அதன் கருத்து அங்கு வடிவான பெண்கள் இருக்கிறார்கள் மற்றவர்கள் பார்த்துவிடாக்கூடாது என்பதற்காக அமைக்கப்பட்டதாம். நாங்கள் சென்ற வீட்டுவேலியும் அப்படித்தான் உயரமாக இருந்தது. மேட்டுக் குடிகள் என்று தங்களைக் கூறிக்கொள்ளும் சிலர் அந்தக் கீழக்குடியில் தலைகீழாக நின்றதை நான் பார்த்தேன். தினசரி வருபவருக்குக் கடன் வசதியும் வழங்கப்படுகிறது. சாதி சனம் பாராமல் எல்லோரும் சமம் என்ற பாணியில் பிளாக்களில் கள்ளு ஊற்றி விற்பனை செய்யப்படுகிறது. சிலர் சுருட்டுப் பிடித்தார்கள்; சிலர் சிகரட் பிடித்தார்கள்; சிலர் செந்தமிழ் பேசி பகிடிவிட்டுச் சிரித்தார்கள். வீட்டுக்காரன் "பெண்புரசுகள் இருக்கிற இடம் கொஞ்சம் மெதுவாகக் கதையுங்கோ நயினா" என்று தாழ்பணிகிறார். 

அங்கு களவாகக் குடிப்பவர்களுக்கு ஒதுக்குப் புறத்தல் ஒரு தாழ்வாரம் இறக்கப்பட்டிருந்தது!  அதிலும் படித்தவர்களுக்கு என்று அவர்களது மரியாதையைக் காப்பாற்றுவதற்காக இன்னுமொருஇடம் அமைதியாக இருந்தது. மிகவும் மரியாதையான இடம்போல் காட்சியளிதது. அமைதிவலயத்திற்குள் நாங்கள் சென்றோம். அதற்குள் வீட்டுக்காரரின் அனுமதியுடன் மட்டுமே செல்ல முடியும். ஆச்சரியம் என்னவென்றால் லொயிக் ஆசிரியர் அதனுள் இருந்தார். வாங்க மச்சான் என்று எங்களையும் அழைத்து உட்காரவைத்தார். கொஞ்ச நேரத்திற்குள் கடல்புறாவில் வரும் கதாநாயகிபோல் மஞ்சுள் அழகி தோற்றத்தில் ஒரு பெண் ஒருமுட்டி கள்ளைக்கொண்டுவந்து லொயிக் வாத்தியாரின்முன் வைத்தாள். அவள்தான் சரளா. அவள்வீடா இது என்று புல்லரித்தது. குப்பையிலும் சில குண்டுமணிகளா? 
லொயிக் வாத்தி சொன்னார். மச்சான் இது நம்ம இடம். பயப்படவேணடாம். சரளா எனது மாணவிதான். உங்களுக்கும் தெரியும். யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிச் சிக்கலில் இருந்து என்னால் விடுபடமுடியவில்லை. அவளையும்: விடுவிக்க முடியவில்லை. ஆ; ஊ என்றால் அவளது தகப்பன் பாளையைச் சீவும் கத்தியைப் பழபழக்கக் காட்டி விடுவான். அவளது வீட்டில் நான் இருக்கிறேன்; அவளும் இருக்கிறாள் எனவே நான் அவளுடன் இருக்கிறேன் என்றார். இது அவரது கதையா படிப்பித்தலா என்று எங்களுக்கு விளங்கவில்லை. தூரத்தில் வெடிச்சத்தம் கேட்கிறது. குட்டிமணியைப் பிடித்துவிட்டார்களாம் என்ற வதந்திச் செய்தி பரவிக்கொண்டு இருக்கிறது. சரளாவின் தகப்பன் எல்லோரையும் விரைவாக வீடுசெல்லும்படி பணிக்கிறார். நாங்களும் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு திருநேல்வேலிக்கு வந்துவிட்டம். பின்னர் இராணுவக் கெடுபடிகளால் தனியார் கல்லுர்ரிகள் ஒன்றொன்றாக மூடப்பட்டுக்கொண்டு இருந்தது. 

சிலவருடங்களின் பின் லொயிக் வாத்தி பாரிசுக்குவந்துவிட்டார். பாரிசில் அந்தக்காலத்தில் வேலை எடுப்பது தங்க வீடு எடுப்பதெல்லாம் இலங்கைத் தமிழருக்கு மிகவும் சிக்கலாக இருந்தது. bathroom க்குள் காலும் வெளியில் தலையுமாகப் படுத்து வாழ்க்கை ஓட்டியவர்களே ஏராளம். லொயிக் வாத்தி வேலை இல்லாத பிரச்சனையைப்போக்க இலங்கையில் இருந்துவரும் அகதித்தமிழரை மொsகோவிலிருந்து ஐரோப்பாவுக்கு அழைத்துவரும் பணியில் ஈடுபட்டார். அதனால் அவர் காலத்திற்கு ஏற்றதுபோல் கள்ளக் கடவுச்சீட்டில் moscow விலே தங்கலானார். இலங்கையில் இருந்துவரும் ஒரு பெண்ணை ஐரோப்பாவிற்கு அனுப்பிவைப்பதற்காக லொயிக் வாத்தி விமானநலையத்தில் காத்திருந்தார். பறவை பறக்கிறது. விமானமும் பறக்கிறது ஆகவே விமானமும் ஒரு பறவை என்று தனக்குத்தானே லொயிக் படிப்பித்துக்கொண்டு நின்றவர் தூரத்தில் தமிழ்சாயலில் ஒரு பெண் வருவதைக் கணடார். 

கிட்டக் கிட்டப் பெண் வந்தாள். தெளிவில்லாத ஒரு விம்பம். போதையும் இல்லைத் தெளிவும் இல்லை என்ன காரணம். எங்கோ பார்த்த முகத்தின் விம்பம். ஆம் அவள்தான் சரளா. இருவருக்கும் எதிர்பாராதா சந்திப்பு. சுமன் என்ற ஒருவர் என்னைக் கூட்டவருவதாக சொல்லி அனுப்பிவைத்தார்கள் என்று சரளா சொன்ளாள். சரளாலுவுக்கு இருந்த பயம் தெளிந்தது. தெரிந்தவர் ஒருவர் துணைக்கு நிற்கிறார் என்று. லொயிக்வாத்தி நான்தான் சுமன் எனது அகதிப்பெயர் இது என்றான். இருவரும் ஈழத்து அச்சுவேலி வீட்டு நண்பர்களாயினர். 
"சார் எங்கள் வீட்டுக்கு வந்தீர்கள். படித்தவர்களுக்கான மறைவிடம் உங்களுக்குக் கிடைத்தது. மேட்டுக்குடி மக்களின் மானம் கீழக்குடி மக்களால் காப்பாற்றப்படுகிறது. ஐக்கியம் இல்லாத உணர்ச்சிகளுக்கு என்னைத் தூண்டினீர்கள். நானோ உங்களுடன் உணர்ச்சி இல்லாத ஐக்கியமாக நடந்து கொண்டென். அப்போது உங்களைத் தடுக்க என்னால் முடியவில்லை காரணம் முதலாவது உங்கள் தொழில். இரண்டாவது எனது பிறப்பு. தொடர்பில்லாத இந்த இடைக்காலத்தில் உங்களை ஒருமுறைகூட நான் நினைக்கவில்லை. காரணம் என்மீது உங்கனுளுக்கு வந்தது ஆசையே தவிர அன்பு அல்ல. அன்பு என்ற வார்த்தை உங்கள் லொயிக் பாடத்திலும் இல்லை. எனது பெற்றோர்கள் ஆமியால் சுடப்பட்டு இறந்துவிட்டார்கள். நாட்டுப் பிரச்சனையால் தம்பியும் அயர்லாந்திற்குப் போய்விட்டான். இந்திய இராணுவக் கெடுபிடியால் நான் கற்பழிக்கப்பட்டுவிட்டேன். என் வாழ்வின் இலட்சியமே என்னைப் புரிந்த ஒருவருக்கு சிறந்த மனைவியாக இருக்கவேண்டும் என்பதுதான்" என்று அழுதுஅழுது தன் சோகங்களைக் கொட்டிளாள். 

லொயிக் வாத்தி உண்மையிலுயே அன்று அவளை விரும்பினான். அவள் தூரத் தூர நின்றாள் என்பது அவனின் வாதம். இருவரும் ஒரு சிற்றுண்டிச் சாலையில் காப்பி அருந்திவிட்டு ஐரோப்பாப் பயணத்திற்கான ஏற்பாடுகளைப் பார்ப்போம் என்று முடிவெடுத்தனர். சரளா " உங்கள் வாழ்வு எப்படிப்போகிறது" என்று கேட்டாள். லொயிக் வாத்தி தனது பாணியில் "உங்கள் வீட்டுக் கண்ணாடியில் சென்று பாருங்கள் எனது மனைவியின் முகம் தெரியும் என்றார்

Post Comment

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 Comments: